முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பண்டிகைகள் என்பது இதுதான் அன்றே கணித்த அறிஞர்..! சரியாக செயல்படுத்திய அரசு

 


இந்தியாவின் பொருளாதார சுழற்சிகளில் பண்டிகைகளுக்கு பெரிய பங்கு உண்டு. 

பண்டிகைகள் பின்னால் மூடத்தன கதைகளை தாண்டி பணம் ஒரு சுற்று சுற்றி செல்லும். இந்த ஒரு காரணத்திற்காக மக்களின் பண்டிகை கொண்டாட்டங்களை ஏற்கலாம். 

பெரும்பாலான சிறுவணிகர்களுக்கு இந்த பண்டிகைகள் கொஞ்சம் போனசாக வருமானத்தை கொடுக்கும். தீடிரென முளைக்கும் சாலைகடைகள், தன்னை பெரிதாக அலங்கரித்துகொள்ளும் பெரிய கடைகள் என இந்த பண்டிகையை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். 

ஆனால் இந்த ஆண்டு பண்டிகை நெருங்கினாலும் தொழில் நகரங்களில் பணப்புழக்கம் இன்னும் அதிகரிக்கவில்லை என்றே சொல்கிறார்கள். குறிப்பாக சிவகாசியில் கடைசி 20 நாள் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். ஆனால் இப்போது அப்படியெதும் இல்லை. 

இவற்றுக்கெல்லாம் துணிக்கடைகள், பட்டாசுகடைகள் அதிகரித்திருப்பது ஒரு காரணமாய் இருந்தாலும் செலவழிக்கும் திறன் குறைந்திருக்கிறது என்கிறார்கள். 

அதாவது,பண்டிகைகளுக்கு செலவழிக்கும் தொகையை குறைத்திருக்கிறார்கள் அல்லது தேவையின் காரணமாக குறைந்திருக்கிறது.

அவர்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்த பட்சம 75% உயர்ந்திருக்கிறது. ஆனால் ஊதிய உயர்வு என்பது 10% கூட இல்லை. இந்த பற்றாக்குறையை அவர்கள் பெரும்பாலும் போனாஸ் கொண்டுநிரப்பிக்கொள்கிறார்கள். அதாவது போனாஸ் என்பதில் 90% செலவாக இருந்த சமூகத்தில் அது இப்போது 30 விழுக்காடு கூட இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. 

இதற்கு பின்னால் இருப்பது மத்திய அரசின் கையாலகதனம் மட்டுமே. 

பணம் என்பது பெருமுதலாளிகளின் உடைமை என்றே ஒட்டுமொத்த நிர்வாகமும் நகர்கிறது. எதன் விலையும் கட்டுக்குள் இல்லை. விளைவு பண்டிகையை வரவேற்க மக்கள் பெரும்பாலும் தயாராக இல்லை.

பண்டிகைகள் என்பது மக்கள் மீது ஏவப்படும் வேட்டை நாய்கள் என்றார் ஒரு அறிஞர். அது உண்மையாகும் காலம் வந்துவிட்டது என்றே தெரிகிறது... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...